பஸ்சை மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
தனியார் பஸ்சில் அதிக கட்டணம் வசூல் செய்ததால் பஸ்சை மக்கள் சிறைபிடித்தனர்.
தஞ்சாவூர்
பாபநாசம்;
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் ஒரு தனியார் பஸ்சில் பயணிகள் டிக்கெட் எடுத்தனர். அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் கூடுதலான ரூ.3 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பயணிகள் பஸ் கண்டக்டரிடம் கேட்ட போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பஸ் நின்றபோது இறங்கி வந்து பஸ் முன்பு நின்று பஸ்சை சிறைபிடித்து கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குவந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story