திறந்தவெளியில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி


திறந்தவெளியில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
x

திறந்தவெளியில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம்பட்டி ஊராட்சியில் திறந்தவெளியில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மதுரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் திறந்த வெளியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை சில மர்ம நபர்கள் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கரும்புகை ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் புகையால் பொதுமக்கள் கண்கள் எரிச்சல் அடைவதோடு சுவாச பிரச்சினைகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாளையம்பட்டியில் பல இடங்களில் இது போன்று திறந்த வெளியில் குப்பைகளைக் கொட்டி எரிப்பது வழக்கமாகிவிட்டது எனவே பொதுமக்களிடம் முறையாக குப்பைகளை சேகரித்து அதை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story