மின்தடையால் பொதுமக்கள் அவதி
மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் சிவசங்குபட்டி ஊராட்சியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையினால் மின் விளக்குகள் பழுதடைகிறது. சிவசங்குபட்டியில் இருந்து குகன்பாறை செல்லும் சாலையில் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் இடையே மின்சார வயர்கள் செல்வதால் காற்றடிக்கும் சமயத்தில் மின்தடை ஏற்படுகிறது. தற்போது தேர்வு சமயமாக இருப்பதால் இரவு நேரங்களில் பாடங்களை படிக்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும். இரவு நேரங்களில் நடமாட முடியாமல் பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story