மின்தடையால் பொதுமக்கள் அவதி


மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

மின்தடையால் பொதுமக்கள் ெபரிதும் அவதிபட்டனர்.

விருதுநகர்

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தாயில்பட்டி, மடத்துபட்டி, இறவார்பட்டி, சல்வார்பட்டி, சேதுராமலிங்கபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மதியம் 1 மணிக்கு மின் தடை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் தான் மீண்டும் மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அறிவிக்கபடாத மின்தடையினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story