மின் நிறுத்தத்தால் மக்கள் அவதி


மின் நிறுத்தத்தால் மக்கள் அவதி
x

ஆற்காட்டில் மின் நிறுத்தத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் உள்ள ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக இரவில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. வீடுகளில் பச்சிளம் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மக்கள் அவதிப்படுகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் ஏ.சி.க்கள், மின்விசிறிகள் ஓடாததால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள் எரியாததால் சாலைகள் இருண்டு காணப்படுகிறது. இதனால் பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இரவில் மின் துண்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story