சுட்ெடரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
அருப்புக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கடும் வெயில்
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வழக்கத்தை காட்டிலும் கடும் வெயில் அடித்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டினுள் இருந்தனர்.
ஆதலால் முக்கிய சாலைகளில் பகல் நேரங்களில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. பஜார் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இளநீர், சர்பத், பதனீர், கரும்புச்சாறு ஆகியவற்றை குடித்து தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்கின்றனர்.
பொதுமக்கள் அவதி
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆதலால் முதியவர்கள், கர்ப்பிணிகள், பொதுக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் முக்கிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். பங்குனி, சித்திரை மாதத்தில் அடிக்கும் வெயிலை விட தற்போது அதிக வெப்பம் காணப்படுகிறது. குளிா்பான கடைகள், கரும்புச்சாறு கடைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலை ேமாதுகிறது. கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதேேபால நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.