கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி


கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி
x

கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை

கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் கொளுத்துகிறது.

வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் சாலையோரம் விற்கப்படும் தர்பூசணி, இளநீர் போன்றவற்றையும், குளிர்பான கடைகளில் குளிர்பானங்களை வாங்கி குடித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக சராசரியாக சுமார் 104 டிகிரி வரை பதிவாகி வந்த வெயில் அளவு நேற்று திடீரென 105.8 டிகிரியாக பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை வரமால் ஏமாற்றி வருகின்றது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைய மழை வருமா என்று மக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


Next Story