குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் வந்துள்ளது. மக்கள் தொகையும் அதற்கு ஏற்ப பெருகி உள்ளது. இதன் அருகிலேயே திருமுடிவாக்கம் சிப்காட்டும் செயல் பட்டு வருகிறது. குறிப்பாக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் மற்றும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை என 2 நெடுஞ்சாலைகள் இந்த பகுதியை இனைப்பதால் தற்போது சென்னையின் மைய பகுதியாக குன்றத்தூர் வளர்ந்துள்ளது குடியிருப்புகள் அதிகரிக்க அதற்கு ஏற்ப இந்த பகுதியில் மின் தட்டுப்பாடும், குறைந்த மின்னழுத்தமும் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்புகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் குறிப்பாக குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வழுதலம்பேடு பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் அதிக அளவில் சிறு, சிறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால் குடியிருப்புகளுக்கு தரக்கூடிய மின்சாரத்தை தொழிற்சாலைகள் பயன்படுத்துவதால் இந்த பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு சீரான மின்சாரம் வருவதற்கு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story