தரமற்றதாக அமைக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
பையூர் கிராமத்தில் சிறுபால பணிகள் தரமற்றதாக அமைக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணியை அடுத்த பையூர் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி தெருவிலும், பால்வாடி தெருவிலும் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலையும், ரூ.2 லட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த பணிகள் முழுமை பெறவில்லை என்றும், தரமற்றதாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.
மேலும் இதனை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆரணி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் லெனின் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இப்பணியை பூர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story