களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி


களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி
x

களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு கோவில்பத்து பகுதியில் கடந்த ஒரு வாரமாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பத்து பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று இரவு காமராஜர் சிலை அருகில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்கள் தண்ணீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே களக்காடு போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தினர். தொடர்ந்து களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story