புழுதி காற்று வீசியதால் மக்கள் அவதி


புழுதி காற்று வீசியதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:46 PM GMT)

புழுதி காற்று வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தெற்கு காற்று என்று அழைக்கப்படும் விசாக காற்று வழக்கமாக வீசும். அதன்படி தற்போது வைகாசி மாதம் பிறந்து விட்டதால் பருவ காற்று வீசி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.வேதாரண்யம் பகுதியில் 4 வீதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் தோண்டப்படும் மண் குவியலாக குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் குவியலில் இருந்து மண் துகள்கள் காற்றில் பறந்து, மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களின் கண்களில் விழுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். புழுதி காற்றால் சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடைகளின் வெளியே உள்ள பொருட்கள் மீது மண் துகள் படிந்து பெரும் சிரமத்தை தருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.


Next Story