கரடு, முரடான சாலையால் பொதுமக்கள் அவதி
கரடு, முரடான சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகப்பட்டினம்
நாகையை அடுத்த நாகூரில் உள்ள அளவுக்கார தோட்டம் பகுதியில் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலை கரடு, முரடாக காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரை சிரமப்பட்டு வருகிறார்கள். வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதே பகுதியில் சுடுகாடு செல்லும் பாதையும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story