கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்-மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்-மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை

மதுரை,


கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பேட்டி

சென்னையில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா? இல்லையா? என்பது பற்றி கருத்து தெரிவிக்க வக்கீல் குழுவிடம் கேட்டிருக்கிறோம். அதுகுறித்த அறிக்கை வந்தவுடன் விரிவான தகவல்கள் தரப்படும். பொது சிவில் சட்டத்தை கைவிடக்கோரி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு தமிழக முதல்- அமைச்சர் கடிதம் எழுதி இருப்பது, அவரது கொள்கை.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த இடம்கோடநாடு எஸ்டேட்.

ஆனால், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அங்கு கொலையும், மிகப்பெரிய கொள்ளையும் நடந்திருக்கிறது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவாக குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. முன்னாள் முதல்-அமைச்சர் வசித்த பங்களாவிலேயே இந்த சம்பவமா? என மக்கள் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள். எனவே, உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்களும் விரும்புகிறார்கள்.

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என கூறுகிறார்கள். அவர்களுடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம், என்னவாக இருக்கிறது என்பதை கட்சி தொண்டர்களும், மக்களும் புரிந்து இருக்கிறார்கள். தென்காசி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் வேட்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசாருடன் வாக்குவாதம்

கலைஞர் நூலக திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகிறார். இதனையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் மதுரை நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி (சட்டம்-ஒழுங்கு) அருண் நேற்று மதியம் மதுரை வந்தார்.

அதே சமயத்தில், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் அவர்கள் நின்றதால், அவர்களை ஓரமாக நிற்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனால், போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story