நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறினா்.
நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறினா்.
நிதி நிறுவனம்
மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன்ரோடு ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இதில் சேக்முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குனராக இருந்து கொண்டு பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக கூறி, உறுதிமொழியில் கூறியதுபோல் திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து, அதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
புகார் அளிக்கலாம்
எனவே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால், அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.
மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும், தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய 0452-2642161 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.