நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
அண்ணா சிலைக்கு மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி கோவை -அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் நடக்கும் கூத்தைபற்றி சொல்லவேண்டியது இல்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம். அது நீதிமன்றத்தில் போராடிக்கொண்டு இருக்கிறது. ஒருசிலரின் பதவி வெறியால் சுயநலத்தில் சிக்கி உள்ளது.
இதற்கு காலம் பதில் சொல்லும். பின்னர் எல்லாம் சரியாகி விடும்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதன் மூலம் ஊழலை ஒழிப்போம், முறைகேடுகளை அனுமதிக்க மாட் டோம் என்று கூறிய வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தி உள் ளனர்.
நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, என தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற் றாமல் திராவிட மாடல் என்று கூறி மக்களை துன்பப்படுத்து கிறது.
மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படு கிறது. இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் எண்ணு கிறார்கள். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தொழில் துறை மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. தற்போது மின் கட்டண உயர்வால் பாதிப்படைகிறது.
இந்தி திணிப்பு
இந்தி திணிப்பை பொறுத்தவரையில் மக்கள் விரும்பியதை ஏற்றுக்கொள்வார்கள். எந்த மாநிலத்திலும் மொழியை திணிப்பது தவறான நடவடிக்கை.
தொழில்துறையை பாதிக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்று இந்த ஆட்சியும் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, கோவை மத்திய மாவட்ட செயலாளர் அப்பாதுரை, தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.