மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:47 PM GMT)

ஊரக வேலை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பார் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை வழங்க வேண்டும், முழு கூலி ரூ.281 தர வேண்டும், வருடத்திற்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வைத்திலிங்கம், துணை செயலாளர் அறிவழகன் மற்றும் செல்வம், சண்முகம், பழனி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story