நிதிஉதவி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


நிதிஉதவி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x

நிதிஉதவி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும். எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story