தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x

தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்குகிறது.

எனவே மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in ஆகிய இணையதங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டிடத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 எம்.பி.பி.எஸ். (MBPS) இ-சேவை மையம் அமையும் இடத்தில் அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமையப்பெற வேண்டும்.

விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி.எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் இ- சேவை மையம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் ெதரிவித்துள்ளார்.


Next Story