மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்தும் வழங்கப்படாத காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story