காந்தி சிலையிடம் மனு அளித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


காந்தி சிலையிடம் மனு அளித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x

காந்தி சிலையிடம் மனு அளித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டமைப்பு சார்பில் நேற்று திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த்துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையினை பார்வையற்ற இசைக்கலைஞர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையிடம்மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.


Next Story