100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இ.சுகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பி.ராஜேந்திரன், எம்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.ஜே.சீனிவாசன், மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ், பொருளாளர் எ.குருமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் ஏசுரெட்டி, துணை செயலாளர்கள் கே.சுந்தரவேலு, எம். செல்வி, மாவட்ட குழு உமா மகேஸ்வரி, ஏ.அப்துல்காதர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசாணை 52-ன் படி, தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். வேலூர் மாவட்ட குழு பி.திலீபன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து இருந்த வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியிடம் சங்க நிர்வாகிகள் மனுக்களை கொடுத்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்போது தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story