ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசின் பல்வேறு சலுகையை 50 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் ஆரணி-தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story