மோட்டார் வாகன வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம்
தேனி உள்பட 3 இடங்களில் மோட்டார் வாகன வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தேனி
நாடு முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம், பெரியகுளம் கோர்ட்டுகளில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.
சார்பு நீதிபதி சுந்தரி முன்னிலை வகித்தார். பெரியகுளம் கோர்ட்டில் சார்பு நீதிபதி மாரியப்பன் தலைமையிலும், உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதன் மூலம் இந்த 3 கோர்ட்டுகளிலும் மொத்தம் 5 வழக்குகளில் ரூ.20 லட்சத்து 57 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story