ஆரணியில் மக்கள் நீதிமன்றம்
ஆரணியில் மக்கள் நீதிமன்றம் 11-ந்தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடக்கிறது.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசமாக தீர்வுகாண விரும்பும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தானாக முன்வந்து சமரசம் செய்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்களும், வழக்காடிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவசமாகவும், துரிதமாகவும் நீதியை பெற இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை ஆரணி நீதிமன்ற சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான ஏ.தாவூத் அம்மாள் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story