சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றம்


சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி, மாவட்ட குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறு, குறு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டு, 54 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1½ லட்சம் பெறப்பட்டது. இதில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் நாசர், சத்யபாமா, முத்துலட்சுமி, சுந்தரி, பாண்டியம்மாள், அனிதா, தலைமை எழுத்தர் ஜேலட், உதவியாளர்கள் விஜய், முத்துலட்சுமி, வட்ட சட்ட பணிகள் நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story