மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மக்கள் நீதிமன்றம்


மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மக்கள் நீதிமன்றம்
x

திருவண்ணாமலையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திருவண்ணாமலை

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான இருசன் பூங்குழலி மேற்பார்வையில், தலைமை குற்றவியல் நடுவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பார் அசோசியேசன் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்துகொண்டனர். மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 368 எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 3 கோடியே 76 லட்சத்து 95 ஆயிரத்து 38 ரூபாய் வழங்கப்பட்டது.


Next Story