மக்கள் குறைதீர் முகாம்
பொறையாறு அருகே எடக்குடியில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது
மயிலாடுதுறை
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடக்குடி ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தாலுகா வட்ட வழங்கல் துறையின் சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று எடக்குடியில் நடந்தது. முகாமுக்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயா தங்கமணி முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் துறை தனி வருவாய் அலுவலர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார். இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் அங்காடி விற்பனையாளர் மதிவதனன்,வார்டு உறுப்பினர்கள் நித்தியா ஜெகன், பக்கிரிசாமி,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story