மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்


மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை மற்றும் 3-வது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதன்மூலம் அவர்களின் குறைகளை உடனடியாக கண்டறிந்து நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.


Next Story