ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம்


ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம்
x

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைவுதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிகப்படியான மக்கள் அங்கு வருவதால் இட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. தனியாக கூட்ட அரங்கம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறைதீர்வு கூட்டம் நடத்த அரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சுமார் 850 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் இதர அலுவலகங்கள் செயல்படுவதற்கு தரைதளம் உள்படி மூன்றடுக்கு கட்டிடம் கட்டுவதற்காக ரூ.12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாற்றுத்திறனாளி நல அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதில் கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கவுதமன், உதவி செயற் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வசதிகள்

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறுகையில், 'மக்களின் வசதிக்காக இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. தரைதளத்தில் குறைதீர்வு கூட்ட அரங்கம் செயல்படும். அங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். இங்கு லிப்ட் வசதி செய்யப்படும். மேலும் முதல் மற்றும் 2-ம் தளங்களில் அலுவலக அறைகள், கணினி அறைகள், பதிவு அறை மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும். இந்த பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெறும். அதன் பின்னர் மக்கள் குறைதீர்வு கூட்டம் இந்த அரங்கில் நடைபெறும்' என்றார்.


Next Story