மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 222 மனுக்கள் பெறப்பட்டது.

ராணிப்பேட்டை

மக்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி உள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய 222 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தையல் எந்திரம்

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் ஜி.ஆர்.பேட்டை குழந்தை மைய பணியாளர் ராணி என்பவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், அவரது வாரிசுதாரர் தமிழரசி என்பவருக்கு கருணை அடிப்படையில் அரக்கோணம் வட்டாரம், விஸ்வநாதபுரம் குழந்தைகள் நல மையத்தில் குழந்தை மையப்பணியாளராக பணிநியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story