திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 570 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 570 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சான்றிதழ்

கூட்டத்தில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மறைமலை நகரில் நடைபெற்ற தமிழகத்தில் கிராம சபைகளை வலுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் பயனுள்ள கருத்துகளை எடுத்துரைத்து சிறப்பாக பங்கேற்றமைக்காக திருபனமூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நந்தகுமார், வேடநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, சந்தவாசல் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் திருவண்ணாமலை வட்டத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு கணினி மின்னணு குடும்ப அட்டையினை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story