மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 113 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இலவச வீட்டு மனைபட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 113 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பழனிவேல், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மாதவன், பூம்புகார் சட்டமன்ற தொகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மதியழகன், மணிகண்டன், ஆகியோருக்கு கலெக்டர் லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவிஆணையர் (கலால்) நரேந்திரன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story