மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 175 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், இலவச வீட்டுமனைபட்டா , பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 175 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரியநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.கூட்டத்தில்,தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) கண்மணி, உதவிஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்டவழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Next Story