மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 158 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 28 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 32 மனுக்களும், புகார் தொடர்பாக 25 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 23 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 10 மனுக்களும் என மொத்தம் 158 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.