மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், வாரந்தோறும் புதன்கிழமை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். நேரில் வர முடியாதவர்கள் 10581 என்ற இலவச எண் மூலம் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story