மக்கள் குறைகேட்பு கூட்டம்


மக்கள் குறைகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 481 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.5,190 மதிப்பில் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்து

துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story