மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைந்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். அப்போது அவர் கூறும் போது:- ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெற வேண்டும். மேலும் 10581 என்ற எண் மூலமும் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களன் விவரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.