மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்


மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:10 PM IST (Updated: 27 Jun 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொதுநலன் குறித்த 286 மனுக்கள் பெறப்பட்டன.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story