மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். 51-வது வார்டு கவுன்சிலர் சகாயஜூலியட் மேரி கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரின் வடக்கு பகுதியில் 2 தெருக்களில் மட்டும் மழைநீர் ஓடை அமைக்கப்பட்டு, தண்ணீர் பெரியகுளம் வரை செல்கிறது. அதேபோல் தெற்கு பகுதியிலும் மழைநீர் வடிகால் அமைத்து இணைக்க வேண்டும். ஜெயில்சிங் நகரின் தெற்கு பகுதியில் இருந்து பெரியகுளம் வரை மழைநீர் ஓடையை சீரமைத்து, கரையை 2 அடி உயர்த்தி தரவேண்டும்'' என்று கூறி இருந்தார்.

திருநகர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சங்கரன், பொருளாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், ''திருநகர் பகுதியில் அமைத்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 312 வீடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்'' என்று கூறிஉள்ளனர். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.


Next Story