மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கழிவு நீர் ஓடை அமைக்க வேண்டும். தெருவிளக்கு பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

நெல்லை மாநகர திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கத்தினர் செயலாளர் ரத்தினம், பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மேயரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "திருமண மண்டபம் தற்போது நடத்த முடியாத அளவிற்கு சூழ்நிலை உள்ளது. எனவே திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை குறைக்க வேண்டும். குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அள்ள வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். 3 வருடங்களுக்கு சுகாதார சான்று வழங்க வேண்டும். சுகாதார சான்று வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளனர்.


Next Story