மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்


மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

கிடாரங்கொண்டான் ஊராட்சியில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சியில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பாரத், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் மின்னணு குடும்ப அட்டையில் செல்போன் எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல், பெயர் நீக்குதல்,சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக 64 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கண்காணிப்பாளர் சகாயராஜ், ஊராட்சித்துணைத் தலைவர் மைனாவதி, அங்காடி விற்பனையாளர் மதிபிரகாஷ் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story