தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்


தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்
x

ஜோலார்பேட்டை நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் வருவாய் கோட்ட அலுவலர் லட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கோ.பழனி வரவேற்றார். நகரமன்ற தலைவர் காவியா விக்டர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்வலம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி எஸ்.கோடியூர் ஆரம்ப சுகாதார நிலையம் வரை நடைபெற்றது. இதனை அடுத்து ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மங்கம்மாள் குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு கரையோரம் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார் தாசன், நகர செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி பொறியாளர் கோபு உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story