தூய்மைக்கான மக்கள் இயக்க திட்ட தொடக்க விழா


தூய்மைக்கான மக்கள் இயக்க திட்ட தொடக்க விழா
x

திருப்பத்தூர் நகராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்க திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம், எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகத்துடன் கூடிய புதிய திட்ட தொடக்க விழா நகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தூய்மை உறுதிமொழி வாசிக்க அதனை நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாசித்தனர். இதனை தொடர்ந்து 1 முதல் 6 வார்டுகளில் தீவிர தூய்மைப்படுத்தும் பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீடுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என அங்கேயே குப்பைகளை வாங்கி எப்படி பிரித்து வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் இளங்கோ, துப்பரவு ஆய்வாளர் குமார், நகராட்சி கவுன்சிலர்கள் குட்டி என்கின்ற சீனிவாசன், கவிதாசரவணன், கவுரி அய்யப்பன், சபீனா ரசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story