பிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் 94.07 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் 94.07 சதவீதம் தேர்ச்சி
x

பிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் 94.07 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பெரம்பலூர்

94.07 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வினை 80 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 623 மாணவர்களும், 3 ஆயிரத்து 572 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 195 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 347 மாணவர்களும், 3 ஆயிரத்து 421 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 768 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.07 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவர்கள் 92.38 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 95.77 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

11-வது இடத்துக்கு தள்ளப்பட்டது

ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே 3-ம் இடமும், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்திலேயே முதலிடமும் இடமும் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் 11-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சென்றதால் பள்ளிக்கல்வித்துறையினர், ஆசிரியர்கள் வருத்தம் அடைந்தனர். மேலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் 90.03 சதவீதம் பெற்று 12-வது இடத்தை பிடித்துள்ளது.


Next Story