பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் தேர்வு


பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் தேர்வு
x

பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கழக பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது. இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களான ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவராக அய்யலூர் சுப்பிரமணியனும், மாவட்ட செயலாளராக செ.ஜெயசீலனும், மாவட்ட பொருளாளராக பேரளி சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கவுன்சிலர் ரபியுதினும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆசிரியர் காமராஜ், கே.எஸ்.ரெங்கராஜ், அடைக்கப்பட்டி எல்.ஐ.சி. பாண்டியன், மங்கையர்கரசி சிகமணி ஆகியோரும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்களாக மெடிக்கல் முத்து, வெண்மணி ராஜசேகர், பம்பரம் பழனிமுத்து, அம்மாபாளையம் ஆசிரியர் துரைராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சென்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏற்கனவே ம.தி.மு.க. தலைமை பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயசீலனை நியமித்த நிலையில் இப்பொழுது. அமைப்பு தேர்தலின் மூலம் அவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story