பெரம்பலூர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட முடிவு


பெரம்பலூர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட முடிவு
x

பெரம்பலூர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் அ.தி.மு.க. சின்னத்தையும், கொடியையும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் உரிமையை எடப்பாடி பழனிசாமி பெற்று விட்டார். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து பிரிந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து இருந்த நாங்கள் இனி எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்துள்ளோம். தி.மு.க.வை ஒழிப்பதை ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. நாங்கள் சார்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் அணி தலைவர்கள் தி.மு.க.வை எதிர்த்து செயல்பட மறுத்து மாற்றுப்பாதையில் செல்வதால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேற்கண்ட தீர்மானங்களை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 9 ஒன்றிய, பேரூர், நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரனை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க வலியுறுத்தி உள்ளோம், என்றனர்.


Next Story