கோவையில் பேரறிவாளன் கேக் வெட்டி கொண்டாட்டம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் கோவையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

கோயம்புத்தூர்

கோவை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் இன்று காலை 9.20 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் வந்தார். அங்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனிடம் தனது விடுதலைக்கு பாடுபட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து அங்குள்ள பெரியார் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். பின்னர் விடுதலையை கொண்டாடும் வகையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேக் வெட்டி தனது மகன் பேரறிவாளனுக்கு ஊட்டினார். தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், புத்தகம் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story