கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி

கடமலைக்குண்டு கிராமத்தில் விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு 18 ஆண்டுகளுக்கு பின்பு வருகிற 12-ந்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி 3 கோவில்களில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து யாகசாலை அமைக்கப்படும் இடத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவரும், முன்னாள் அரசு வக்கீலுமான டி.கே.ஆர்.கணேசன், கிராம கமிட்டி செயலாளர் நல்லாசிரியர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், ஊர் பெரியதனம் பால்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு 24 சமுதாயங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். விரதம் இருக்கும் பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புண்ணிய தளங்களில் இருந்து புனித நீர் கொண்டு வர முடிவு செய்து உள்ளனர்.

கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிகோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


Next Story