கலை பண்பாட்டுத்துறை சார்பில்அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்


கலை பண்பாட்டுத்துறை சார்பில்அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெகதீசன் குழுவினரின் வீரபத்திரசாமி வம்சாவழி உடுக்கை, பம்பை, சிலம்பு கலைச்சங்கம நிகழ்ச்சிகளும், பெரியசாமி குழுவினரின் முத்துமாரியம்மன் தெருக்கூத்து நாடகமும், முருகன் குழுவினரின் மதுரைவீரன் கிராமிய கலைக்குழு தப்பாட்டமும் நடந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் பட்டத்திரி நன்றி கூறினார்.


Next Story