பெண்ணை தாக்கிய பெரியப்பா கைது


பெண்ணை தாக்கிய பெரியப்பா கைது
x

பெண்ணாடம் அருகே பெண்ணை தாக்கிய பெரியப்பா கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த காரையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி இளமதி (வயது 35). இவர் கரையூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு இளமதியின் தந்தை ஸ்ரீரங்கன் இறந்த பிறகு, பெரியப்பா சதாசிவம் இளமதி வசித்து வந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சதாசிவம் இளமதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை காலி செய்யக்கோரி அவரை இரும்புக்கம்பியால் தாக்கி, திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளமதி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சதாசிவம் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story